அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையானது உள்ளூர் மக்களிடையே பல எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதிக்கு ரிஷாட் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக இந்த மதுபானக் கூடத்திற்கான அனுமதி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகவும் இத்தகைய பதற்றமான பகுதியில் மதுபான உரிமம் வழங்குவதற்கான தீர்மானத்தின் சரியான தன்மை குறித்த கவலையை இது எழுப்புவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு, இந்த மதுபானக் கூடத்திற்கான அனுமதியை இரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம்.” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.