நாட்டின் பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே தங்களது நோக்கமே தவிர, சீர்குலைப்பது தங்களது நோக்கமல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி நகரில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவ தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாக அனைத்து தரப்பிலிருந்தும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பெரும்பாலும் மக்களே சிரமங்களை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர்.
தற்போதைய அரசியல் செயற்பாட்டில் நாட்டை வெல்ல வைப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்.
இவ்வாறான நோக்கில் அமைந்த வேலைத்திட்டத்தில் நாட்டை வெற்றியின் பால் இட்டுச் செல்ல வேண்டும்.
இந்த செயல்முறையை ஒருவரால் செய்ய முடியாது. அனைவரும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும். சீர்குலைக்கவோ அல்லது பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் வெற்றிகளைப் பெறவோ நாம் முனையவில்லை,
மாறாக முற்போக்கான முறையில் செயற்பட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Sunday, September 29, 2024
முற்போக்கான முறையில் மக்களுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை - சஜித் !
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »