இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 39,137 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 16,511 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையளம் காணப்பட்டனர். இம்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில் 4,778 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 4,047 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 3,983 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 2,954 நோயாளர்களும் வட மேல் மாகாணத்தில் 2,576 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் 10,417 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sunday, September 29, 2024
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »