இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக
இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
அதன்படி இன்று காலை முதல் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தந்து தங்களுடைய பெறுமதியான வாக்குகளை அளித்தனர்.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சத்து 40,354 பேர் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
ஒட்டுமொத்த வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.