ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து முறைப்பாடளிக்க தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கும் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இராஜகிரிய பொதுத் தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவிற்கு இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்குமாறும் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.
தேசிய தேர்தல் பிணக்குத் தீர்வு அலகு
தொலைபேசி இலக்கம் : 0112796546, 0112796549, 0112796586, 0112868153, 0112796533, 0112796537
வாட்ஸ்-அப் இலக்கம் : 0705396999
பொலிஸ் அலகு
தொலைபேசி இலக்கம் : 0112796536
பெக்ஸ் இலக்கம் : 0112796540, 0112796544