லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் பிராந்திய தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஹஸன் நஸ்ருல்லாஹ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் துணை தலைவர் ஆகியோர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக ஈரானை தளமாக கொண்ட “தஸ்னீம் நியுஸ் ஏஜன்ஸி” அறிவித்துள்ளதுடன், நஸ்ருல்லாஹ் உயிருடன் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ்வுக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்டர் செய்திச் சேவையும் தெரிவித்துள்ளது.