சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிவரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையில் இந்த குழு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாம் தவணை மற்றும் அதன் வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.