Our Feeds


Tuesday, October 15, 2024

SHAHNI RAMEES

7 இலட்சத்து 50 000 கடவுச் சீட்டுகள் இறக்குமதி!




 நாட்டுக்கு அவசியமான 7 இலட்சத்து 50 000 கடவுச்

சீட்டுகளை இறக்குமதி செய்யவும் இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அதற்கமைய, ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். 


திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


இணையவழி கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »