பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் பிரதிநிதி புத்திக டி சில்வா தெரிவிக்கையில்;, வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோ செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெயை நாடு முழுவதும் விநியோகிக்கும் நயவஞ்சக நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.