எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம். இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியின் வெற்றியை உறுதி செய்யவும் பலமான அணிகளை உருவாக்கி வருகிறோம் என்றார்.
மேலும், கட்சியை விட்டு வெளியேறி சென்றவர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட மாட்டாது என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Tuesday, October 1, 2024
அனைத்து மாவட்டங்களிலும் மொட்டுச் சின்னத்தில் போட்டி– பொதுஜன பெரமுன!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »