Our Feeds


Wednesday, October 2, 2024

Zameera

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


 திருத்தப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் குறித்து பயணிகள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு இயக்கப்படும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பஸ்கள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கம் 1955 அல்லது வாட்ஸ் ஆப் இலக்கம் 071 25 95 555 இற்கு பயணிகள் முறைப்பாடுகளை அளிக்கலாம்.


இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் மற்றும் மாகாண பஸ் சேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகார சபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »