புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல்
உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.அந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சட்டத்தரணி குமார் துனுசிங்க, சட்டத்தரணி இந்திக்க வேரகொட மற்றும் டாக்டர் விதானகே ஆகியோர் அடங்குவதுடன், குழுவின் செயலாளர் - சட்டத்தரணி யசஸ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆய்வு அறிக்கையை 3 வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், பின்னர் ஐ.தே.க செயற்குழுவில் அறிக்கையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.