Our Feeds


Wednesday, November 20, 2024

SHAHNI RAMEES

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - சுகாதார அமைச்சர்

 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர். 

இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28 வயதுடைய தாயின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »