பத்தரமுல்ல பெலவத்தை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 12 பெண்கள் உட்பட 18 பேர் பொய்யான ஆவணங்களுடன் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நேற்று (19) வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த மேல்மாகாண தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் மேல் மாகாண தெற்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் திகதி முத்திரை அடங்கிய ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த குழுவின் தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.