கடும் மழை காரணமாக ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி இன்று (30) இடம்பெற்றது.
இதன் காரணமாக பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பசறை பகுதியில் மண்சரிவினால் முற்றாக தடைப்பட்ட பசறை - லுணுகல வீதியின் ஒரு பாதை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படவுள்ளது.