Our Feeds


Saturday, November 30, 2024

Zameera

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய காற்றின் தரக் குறியீட்டின் படி கொழும்பு நகரம் 108 முதல் 116 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் 112 முதல் 120இற்கு இடையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, பதுளை, திருகோணமலை உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு 100இற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »