விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்த 17 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் இன்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவி தனது பாடசாலை நண்பியின் கையை பிடித்துக்கொண்டு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளதாகவும் இந்நிலையில் குறித்த மாணவியை காப்பாற்ற அவரது நண்பி பெரும் முயற்சி எடுத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவி புடலு உயன பிரதேசத்தை சேர்ந்தவர்.
உயிரைக் காப்பாற்றிய குறித்த மாணவி தற்போது தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தனது காதலை பெற்றோர் ஏற்காததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.