Our Feeds


Wednesday, November 20, 2024

SHAHNI RAMEES

ஐந்து மணி நேர வாக்குமூலம் – சிஐடியிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்



குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச்

சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்.


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக வெளியான சனல் 4 காணொளி குறித்து வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் காலை வாக்குமூலம் வழங்க வந்திருந்தார்.


இந்நிலையில் சுமார் 5 மணி நேரத்தின் பின்னர் வாக்குமூலம் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »