15 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி
மற்றும் பல வகையான மட்டிகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வனவிலங்கு அதிகாரிகளின் சோதனையின் போது இரண்டு KING Conch SEASHELL மற்றும் ஒரு ஒரு வலம்புரி சங்குடன் மாதம்ப பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களையும் வனவிலங்கு உத்தியோகத்தர்கள் கைப்பற்றியதையடுத்து, ஆணைவிலுந்தான் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
