சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த மனம்பிட்டிய
– அரலகங்வில வீதிப் பாலத்தை 2 நாட்களுக்குள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புனரமைத்துள்ளனர்வழமையாக இவ்வாறான நிர்மாணப்பணிகளுக்கு 15 நாட்கள் தேவைப்படுகின்ற போதிலும், குறித்த அதிகாரிகள் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் பலனாக இரண்டு நாட்களில் இதனை கட்டி முடிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மனம்பிட்டிய - அரலகங்வில வீதியில் உள்ள இந்த பாலம் இன்று (01) காலை முதல் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது