Our Feeds


Sunday, December 1, 2024

SHAHNI RAMEES

முதலில் மக்களுக்கு உதவுங்கள் - பின்னர் அரசியல் செய்யுங்கள் - வெள்ள நிவாரணத்தின் போது ரஸ்மின்

 


முதலில் மக்களுக்கு உதவுங்கள் - பின்னர் அரசியல் செய்யுங்கள்

- வெள்ள நிவாரணத்தின் போது ரஸ்மின்


தேர்தல் காலங்களில் மட்டும் மைக்  முன்னால் பேசிவிட்டு இலட்சக் கணக்கில் செலவிடுகிறார்கள். ஒரு சிலர் உதவி செய்கின்றார்கள். தவிர இன்னும் பலரை  காண முடியவில்லை.


இந்த விடயத்தில்  இன ஜாதி மதம்   பாக்க முடியாது. அனர்த்தம் என்பது யாவருக்கும் சமம். பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது.*


அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு   உதவிகளை செய்து  வருகிறோம்.


மாவட்டத்தின் முழு பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது .

உச்சகட்டமாக சம்மாந்துறை  பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் அரபுக் கல்லூரியில் கல்வி கற்ற ஆறு மாணவர்கள் உட்பட ஏனைய இருவர் மரணம் அடைந்து சோக சம்பவமும்  பதிவாகி இருக்கின்றது.


அம்பாறை மாவட்டத்தின்  பொத்துவில் தொடக்கம்  கடைக்கோடி வரையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றது அல்லாஹ்வின் உதவினாலும் எமது முயற்சியினாலும் பாலஸ்தீன மக்களின்  காணொளிகளை பார்க்கின்றவர்கள் அதன் அனுதாபிகள் செய்த உதவிகளின் ஊடாக இன்று  பொத்துவில் நிந்தவூர் சம்மாந்துறை உள்ளிட்ட சில  பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்  பல்வேறு உலர் உணவுப் பொருட்களை கொடுத்து வருகின்றோம்.



இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டு காட்டலாம் என்று நினைக்கின்றேன். எமது நாட்டில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற  தேர்தலில் எல்லா பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 60க்கும் மேற்பட்ட கட்சிகள்  சுயேட்சை குழுக்கள் போட்டியிட்டன. குறிப்பாக எம்பிக்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட குறிப்பாக வாய்க்காலில்  தண்ணீர் செல்கிறதா நீர் எங்கு செல்கின்றது என்பதைத்தான் பார்க்கின்றார்கள். அந்த விடயங்களை அனர்த்த  முகாமைத்துவ   அதிகாரிகள் தான்  பார்ப்பார்கள்.


 நாங்கள் பார்க்க வேண்டியது என்னவென்றால்   மக்கள் சாப்பிடாமல்  இருக்கிறார்களா? அவர்களுக்கு எவ்வாறான வழியில் உதவி செய்ய வேண்டும். உணவில்லாமல் இருக்கிறார்களா? தங்குவதற்கு  இடம் இல்லாமல் இருக்கிறார்களா?என்று ஆராய வேண்டும்.


 தேர்தல் என்று வருகின்ற போது மக்களுக்காகவே நாங்கள் செலவு செய்கிறோம் என்று இலட்சக் கணக்கில்  செலவிடுகிறார்கள். அவ்வாறு செலவு செய்பவர்கள்  இவ்வாறான விடயங்களில் தான் செலவழிக்க வேண்டும். இவ்வாறான நிலைமைகளில் கூட மக்களோடு மக்களாக   ஒரு சிலர் உதவி செய்கின்றார்கள். தவிர இன்னும் பலரை  காண முடியவில்லை.இந்த விடயத்தில்  இன ஜாதி மதம்   பாக்க முடியாது.அனர்த்தம் என்பது யாவருக்கும் சமம்.பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது.


இவ்விடயத்தில்  அனைத்து தலைவர்களும்   சமூகவியலாளர்களும்  ஒன்றாக செயல்படுகின்ற போது நிறைய நன்மைகள் எம்மக்களுக்கு  கிடைக்க  வாய்ப்பு இருக்கின்றது பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டெடுப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே தேர்தல் காலங்களில் மட்டும் மைக்  முன்னால் பேசிவிட்டு முகநூலில் புகைப்படங்களை பதிய  விட்டு நாங்கள் அங்கு போனோம் இங்கு போனோம் என்று செய்திகளை வெளியிடாது  இந்த விடயத்தில் வாரி வழங்க முன் வர வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »