Our Feeds


Sunday, December 1, 2024

SHAHNI RAMEES

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமில்லை - பாதுகாப்புச் செயலாளர்.

 



வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும்

நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தி ஆதரிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் இனவாத அடிப்படையில் அந்த நிகழ்வினை வெளிப்படுத்த விளைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


வடக்கு, கிழக்கில் கடந்த 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அடுத்து தென்னிலங்கையில் அநுர குமார அரசாங்கம் இந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அளித்துள்ள சுதந்திரமான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தீவிரமான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும். அதற்கு நாங்கள் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம்.


அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியான முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவேந்தினார்கள். அதனால் எமக்கு ஏந்தப்படவில்லை.


ஆனால், தென்னிலங்கையில் அந்த விடயங்களை வெவ்வேறு அரசியல் சுய இலாபத்துக்காக சிலர் பயன்படுத்த முனைகின்றனர் என்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.


உண்மையில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தமது அரசியல் மீள்பிரவேசத்துக்காக வழக்கம்போலவே இனவாத்தினை திணிக்கப்பார்க்கின்றார்கள்.


அனால் அவர்களின் நோக்கங்களை மக்கள் அறிவார்கள். அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கு மக்கள்  வாக்களித்துள்ளார்கள். அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்கின்றார்கள். அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கும்.


வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இனவாதம், மதவாதம் தோல்வி கண்டுவிட்டது. மீண்டும் அதற்கு இடமளிப்பதன் ஊடாக நாட்டுக்கு எதிர்மறையான நிலைமைகளே ஏற்படும். ஆகவே மக்கள் அத்தகையவர்களுக்கு இடமளிக்காது என்ற நம்பிக்கை எனக்குள்ளது.


தற்போதைய நிலையில் தேசிய பாதுகாப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவிதமான நடவக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 


தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை தமக்குச் சாதகமாக பயன்படுத்தவே போலிப்பிரசாரம் செய்கின்றார்கள். இது உண்மையில் தேசிய நல்லிணக்கத்தையும்ரூபவ் சகவாழ்வையும் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.


அதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கக்கூடாது. அதேபோன்று வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தினை ஆதரித்து அதனை முன்னிலைப்படுத்துபவர்கள் சம்பந்தமாகவும் நாம் தீவிரமான கவனம் செலுத்தியிருந்தோம்.  அதுதொடர்பில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »