கார் பழுதுபார்க்கும் கடையொன்றில் இருந்து சட்ட விரோதமாக உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட லேண்ட் ரோவர் ரக ஜீப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த ஜீப் வண்டி நேற்று (30) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
வாகன திருத்தும் நிலைய உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பொலிஸ் பிரிவின் ஆச்சார்ய போதி விஹாரத்திய ஹெனகம தம்மதன தேரர் லேண்ட் ரோவர் ரக சேஸ், நான்கு டயர்கள் மற்றும் பழைய இயந்திரம் ஒன்றை கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தை பழுதுபார்ப்பதற்கு தேவையான உதிரிபாகங்களை உரிமையாளர்கள் அவ்வப்போது கொண்டு வந்ததாகவும், பின்னர் மாரவில பிரதேசத்தில் இருந்து இயந்திரம் கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.