இறக்குவான பிரதேசத்தில் துப்பாக்கி தயாரிப்பு பொருட்கள் மற்றும் துப்பாக்கி உதிரிபாகங்களுடன் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இறக்குவான நோரோக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுத்தியல், உலோக ரிவால்வர், இரண்டு துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஒரு ஸ்பிரிங் பகுதி, இரண்டு உலோக ரிவால்வர், நான்கு ரிவால்வர் சிலிண்டர் பாகங்கள், ஒரு சிலிண்டர் கோப்பை, இரண்டு உலோக சுத்தியல் பாகங்கள், இரண்டு உலோக வில் பாகங்கள் என்பன சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.