வடக்கில் மாவீரர் நாள் கொண்டாடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக்க பெரேராவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (5) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.