Our Feeds


Tuesday, December 10, 2024

Zameera

எல் சால்வடாரில் நிலநடுக்கம்




 

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


அந்த நாட்டுத் தலைநகா் சென் சால்வடாருக்கு 152 கி.மீ. தொலைவில் உள்ள கடரோலப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது.  15.4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கினாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.


புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் எல் சால்வடாா் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »