Our Feeds


Monday, December 16, 2024

Sri Lanka

அமைச்சர்கள் உட்பட மேலும் ஐவரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் சந்தேகம்!

பாராளுமன்றத்தில் மேலும் ஐந்து அமைச்சர்களின் கல்வித் தகுதி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்களில், நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அநுர கருணாதிலகவின் பட்டம், எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் பட்டம் உள்ளிட்ட ஆறு பேரின் கல்வித் தகைமைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தகவலறியும் சட்டத்தின் கீழ் இவர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களைப் பெறுவதற்கான பணிகளை ஒரு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சில எம்.பி.க்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் பதிவாகியிருந்த சில கல்வித் தகுதிகளை நீக்கத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் அவற்றை அவதானிக்கும் போது அவை கடந்த நாட்களிலேயே நீக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »