கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பஸ்ஸுடன் தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த 17 வயதுடைய பாடசாலை மாணவி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சிறுமி கட்டம்பே மஹாநாம கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்றவர் என்றும் மேலதிக வகுப்பிற்காக தந்தையுடன் மேலதிக வகுப்புக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரவிக்கின்றனர்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளும் தனியார் பஸ்ஸும் கட்டம்பேயிலிருந்து கண்டி நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Monday, December 16, 2024
வாகன விபத்து- பாடசாலை மாணவி பலி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »