அரசியலமைப்பு சபையின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் அதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவும், அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை தமிழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசியலமைப்புச் சபை இன்னும் ஜனாதிபதியின் பிரதிநிதியை மட்டுமே நியமிக்கவில்லை.