Our Feeds


Wednesday, December 25, 2024

SHAHNI RAMEES

ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை !

 

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இருந்துவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. 

எனினும் தற்போது வரையில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்படுமா இல்லை அப்பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போது,

'பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் சம்பந்தமாக இதுவரையில் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதுதொடர்பில் விரைவில் தீர்மானம் எடுப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவி வகித்திருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜுன் முதலாம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி அவருடைய பதவிக்காலம் நிறைவுக்கு வந்திருந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 31ஆம் திகதி வரையில் பதவிக்காலத்தினை நீடிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »