டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது இலங்கை அணி வீரராக அஞ்செலோ மெத்யூஸ் பதிவாகியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
குறித்த வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார சங்கக்கார 12,400 ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக மஹேல ஜெயவர்தன 11,814 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.