Our Feeds


Friday, January 31, 2025

Zameera

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க ஜனாதிபதி அனுமதி


 யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (31) காலை  10மணிக்கு ஆரம்பமாகியது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு வழி வகைகள் எதுவும் இருக்கிறதா? என யாழ்ப்பாண மாவட்ட செயலக மாவட்ட பதில் அரசாங்க அதிபரை ம.பிரதீபனிடம் ஜனாதிபதி வினவினார்.

அதற்கு பதிலளித்த மாவட்ட  பிரதீபன், எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இருப்பினும் வடக்கு மக்களுக்கு தேவையான ஒரு விடயமாக கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதால் அதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம் என அரச அதிபர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா,  ஜெ.றஜீவன், இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், திணைக்களத் தலைவர் கள்,  பணிப்பாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »