பேர வாவியில் விலங்குகள் இறந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளின் இறுதிப் பரிசோதனை அறிக்கை இன்று (31) வெளியிடப்படும் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நீரில் அம்மோனியாவின் செறிவு பெருமளவு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி ஷியாமலி வீரசேகர தெரிவித்துள்ளார்.
"இந்த நேரத்தில் நாங்கள் சொல்ல வேண்டியது என்னவென்றால், தண்ணீர் தூய்மையற்ற அளவில் உள்ளது. இருப்பினும், அது தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்படும்."
இதனிடையே, பேர வாவியில் இறந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நகராட்சி கால்நடை மருத்துவர் டொக்டர் முகமதி இஜாஸ் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில் பரிசோதனை அறிக்கைகளை வழங்க முடியும் என முகம்மதி இஜாஸ் குறிப்பிட்டுள்ளார்.