Our Feeds


Friday, January 31, 2025

Zameera

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா


 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் அந்தப் பதவியில் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தனது இராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கி ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்ததாக கடந்த 29 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசிய தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »