Our Feeds


Tuesday, February 11, 2025

SHAHNI RAMEES

14ஆம் திகதி அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்!




 பிரதமர் ஹரினி அமரசூரியவின் கோரிக்கைக்கு

அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16க்கு அமைய எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.


பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது  சபாநாயகரால் நேற்று (10) பிரசுரிக்கப்பட்ட 2423/04ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய அன்றைய தினம் பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் சகல  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.


அன்றைய தினம், உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானம் சபாநாயகரினால் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது. 


அத்துடன், அந்த சட்டமூலத்தை ஆராயும் நோக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அன்றைய தினமே (14) கூடவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »