Our Feeds


Tuesday, February 11, 2025

SHAHNI RAMEES

தெஹிவல : மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் - சுமக வித்தியாலய விவகாரம் நடந்தது என்ன?


 தெஹிவல : மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் - சுமக வித்தியாலய

விவகாரம் நடந்தது என்ன?


1952 ஆரம்பிக்கப்பட்ட அரச பாடசாலையே மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் தனியார் பாடசாலை அல்ல


மொரட்டுவை இருந்து கொம்பனி வீதி வரைக்கும் சுமார் 30 km தூரத்துக்கு எந்த முஸ்லிம் பாடசாலைகளும் இல்லை, முஸ்லிம் மகளிர் கல்லூரியை தவிர


தெஹிவலை பகுதியை சூழ பாடசாலை மாணவர்கள் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர்


பணம் படைத்த குறிப்பிட்டவர்களை தவிர அதிகமானவர்கள் பாடசாலைகள் இல்லாமையால் மாத்திரமே கடன்பட்டு பலரிடம் கையேந்தி பணம் பெற்றே சர்வதேச பாடசாலைகளில் தம் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனர்.


பலர் பணம் செலுத்த முடியாமல் பிள்ளைகளை இடைநிறுத்தி தொழிலுக்கு அனுப்புகின்றனர்


நாளாந்தம் புதிய அனுமதிக்காக மாணவர்கள் வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

இடப்பற்றாக்குறையால் உள்வாங்க முடியாத நிலை

தற்போது வெறும் 23 பேஷஸ் காணியில் 600 பிள்ளைகள் கற்கின்றனர்.

வகுப்பறை இடப்பற்றாக்குறை

இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கான இடமின்மை

மைதானம் இல்லை

வாசிகசாலை இல்லை

பிள்ளைகளுக்கு நடமாடக் கூட இடமில்லை

பாடசாலையில் உள்ள 95 வீதமான வளங்கள் மாணவர்களின் கதிரை மேசைகள் உட்பட *அரசால் தரப்பட்டதல்ல

தனியார் மூலம் பெறப்பட்டவைகளே


அத்துடன் 600 பிள்ளைகள் உள்ள பாடசாலை ஆனால் எந்த ஒரு ஊழியரும் இல்லை ,

காரியாலய உத்தியோகத்தர்களும் இல்லை , பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இல்லை


எமது இப்பிரச்சினைகளைகோட்டம் , வலயம் , மாகாண கல்வித் திணைக்களங்களுக்கு தொடர்தேர்ச்சியாக அறிவிக்கப்பட்டது


அதன் விளைவாகவே எமது மாணவர்களுக்கும் கற்பித்தலுக்கு இடம் வழங்க வேண்டும் எனும் தேவையை அதிகாரிகளுக்கு உணர்த்தியது.


அதன் பின்னணியிலேயே அதிகாரிகள் மூடப்பட்ட அரச இடங்கள் , அரச பாடசாலைகளை தேடினர்.


இதன் போது தான் பல வருடங்களாக மூடப்பட்டு

காடு வளர்ந்து கல்வர்களதும்

தூல் பாவணையாளர்களதும் இடமாகவும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தும் இடமாகவும் மாறியிருந்த சுமக வித்யாலயாம் அதிகாரிகளின் கண்ணுக்கு தென்பட்டது.


அதிகாரிகள் பல நிபந்தனைகளை விதித்து கையோப்பம் பெற்று

சுமக வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தினை கூட தராது அங்கிருந்த பாவணைக்கு

சிரமமான அதிகமாக பழுதுபட்டிருந்த பழைய ஒற்றைக் கட்டிடத்தை வெறும் ஒருவருடத்துக்கு மாத்திரம் சட்டபூர்வமாக வழங்கினர்.


மாணவர்களுக்கு கற்பிக்க இடம் அவசியம் என்பதனால் வேறு வழியின்றி திருத்த வேலைகளுக்கு சுமார் 30 இலட்சம் திட்டமிட்டு புணர்நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது


வேலைகள் ஆரம்பித்த நாளிலிருந்து குறித்த சுமக வித்யாலயாம் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.


ஆனால் யாரும் எவரும் எந்தத் தடையும் விதிக்கவில்லை


பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் தருணத்தில் (அன்று 2025/01/30) நாளை பாடசாலைக்கு செல்ல இருக்கும் நிலையில் தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களின் சகல தளபாடங்களும் கொண்டு சென்று வகுப்றைகளை ஒழுங்கு படுத்திய பின்னர்

சகல அதிகாரிகளும் பாடசாலையை முறையாக ஒப்படைத்த பின்னர் குறிப்பிட்ட சிலர் மூலம் இப்பிரச்சினை முன்னைக்கப்பட்டது.


நாம் குறித்த பாடசாலையை வழங்குமாறு கேட்க வில்லை


எமக்கு கற்பித்தலுக்கு இடமே கேட்டோம்


அரச அதிகாரிகள் மூலம் முறையாக அவ்விடம் வழங்கப்பட்டது.


அதன் பின்னர் புணர்நிர்மானம் செய்தோம்.


பாழடைந்த இடத்தை மிக அழகாக மாற்றியமைத்ததன்பின்னர் அரச இடத்துக்கு உரிமை கோருகின்றனர்.


சுமார் 7 வருடத்துக்கும் மேல் பாழடைந்து இருந்த போதும்


யாரோ பணம் பெற்று தனியார் பாலர் பாடசாலைக்கு வழங்கியிருந்த போதும்

கேட்போர் பார்ப்போர் இன்றி கல்வர்கள் பாடசாலையின் சொத்துக்களை சூரையாடிச் சென்ற போதும்


ஓர் குடும்பத்துக்கு அவ்விடத்தில் விடுதி கொடுத்து வாழவிட்ட போதும்


ஸெமி அரசின் பயிற்சி நிறுவனத்துக்கு பாடசாலையின் அறை பகுதியை எழுதிக் கொடுத்த போதும்


போராடாத அச்சமூகம் சிறுவர்களின் கற்பித்தலுக்காக வழங்கியதும் போராடுகின்றனர்

இதன் நியாயம் என்ன


*இதற்கான மூல காரணமாக நாம் ஊகிப்பது*


இப்பாடசாலைக்கு அருகாமையில் காணப்படும் vocational training centre மூலம் இதனை பெறுவதற்கு முயற்சி செய்த போதும் semi government என்பதனால் அரசு மூலம் வழங்க மறுத்ததால் அதற்கான காழ்ப்புணர்ச்சியால் பின்னால் நின்று போலியாக இனவாதத்தை காட்டி போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அநியாயமாக சிறுவர்களின் கற்பித்தலுக்கு தடைவிதித்து சாதனை காட்ட முயற்சிக்கின்றனர்.


தரம் 01 முதல் 05 வரையாக சுமார் 250 பிள்ளைகளின் கல்வி நிலை கேள்விக்குறியாகி உள்ளது


பதில் தருவது யார்


கண்ணீருடன் பிள்ளைகளின் கல்விக்காக ஏங்கும் பெற்றோர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »