இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் தங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல் ஆலை உரிமையாளர்கள் சிலர் ஈரமான நெல்லை 85 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக நெல் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
Saturday, February 1, 2025
மிகக் குறைந்த விலையில் நெல் கொள்வனவு - விவசாயிகள் குற்றச்சாட்டு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »