அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்குவாதம் இடம்பெற்றது.
தன்னை நிதிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி தன்னை நிதிக்குழுவில் இணைத்துக் கொள்ளவதாக உறுதியளித்திருந்தார் என சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்,
ஜனாதிபதி உறுதியளித்தும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவரின் குற்றச்சாட்டையும் என்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு தெரிவித்தார்.
Thursday, February 27, 2025
ரவூப் ஹக்கீமுக்கும், பிமல் ரத்நாயக்கவுக்கும் வாக்குவாதம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »