Our Feeds


Monday, February 3, 2025

Zameera

ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றுள்ளார்


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பிற்காக லண்டன் சென்றுள்ளார்.


இந்தப் பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா ஊடக வலையமைப்பால் நடத்தப்படும் சர்வதேச அளவிலான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க உள்ளார்.


இந்த சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டில் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின்போது பிரதமராக இருந்த தனது அனுபவங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்க தனது கருத்துக்களை வெளியிட உள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க கிட்டத்தட்ட பத்து நாட்கள் லண்டனில் தங்கியிருப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »