பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் பெல்கஹவத்த, மல்கஸ்தலாவ, மெல்லகம, மெதகம பகுதியைச் சேர்ந்த டி.எம். வினுர விதுல்க திசாநாயக்க என்ற சிறுவன் ஆவார்.
குழந்தையின் தந்தை அன்று காலை வேலைக்குச் சென்றிருந்ததாகவும், குழந்தை தனது தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாட்டி, வேலை செய்துகொண்டிருந்த வேளை குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தாய் தூங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவள் விழித்தெழுந்த போது, மகன் தன்னுடன் இல்லை என்பதைக் அவதானித்து விசாரித்தபோது,
குழந்தை வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்ட அவள் குழந்தையை வெளியே இழுத்து எடுத்து மெதகம பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் மருத்துவர்கள் , சிறுவனையை பரிசோதித்த போது, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்