ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஒரு மாத காலத்திற்குள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி அப்பாவி விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தனது கொள்கை அறிக்கையிலும், தேர்தல் மேடையிலும் நெல் மாஃபியாவை முடிவுக்கு கொண்டு வந்து, நெல் விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலுக்கு உயர்ந்த விலை வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் இவை அனைத்தும் பொய் வார்த்தைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள விசேட அறிக்கையை கீழே காணலாம்.
எதிர்க்கட்சித் தலைவரின் விசேட அறிக்கை (2025.02.02) by Ramesh RK on Scribd