77வது தேசிய சுதந்திர விழாவுக்கான ஒத்திகை இந்த நாட்களில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது.
தேசிய மறுமலர்ச்சிக்காக அணிவகுப்போம் என்ற தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர வைபவம் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக விளங்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.