மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு சேவையாக இலங்கையின் புகையிரத சேவை மீளமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கண்டியில் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இருந்து தெமோதர நோக்கி பயணித்த 'எல்ல ஒடிசி - கண்டி புகையிரதத்தில் எல்லவுக்கு செல்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கண்டி ரயில் நிலையத்துக்கு சென்றபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும். அதற்காக அரசு பாடுபட்டு வருகிறது.
முந்தைய அரசுகள் நமது நாட்டின் அரசு நிறுவனங்களையும் பொதுச் சேவையையும் புறக்கணித்தன. இதனால், அந்த நிறுவனங்கள் சரிந்தன.
இடிந்து விழுந்த நிறுவனங்களில் ரயில்துறையும் அடங்கும். புகையிரதத் துறையினரின் அலட்சியத்தால் ரயில் சேவைகள் பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்தது.
புதிய மலிமாவ அரசாங்கம் வந்த பின்னர் அனைத்து அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தலையிட்டு ரயில் சேவையை மீண்டும் பொது சேவையாக கட்டியெழுப்ப பாடுபட்டனர்.
இந்தச் சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகமானதாகவும் அதிக இலாபம் தரக்கூடியதாகவும் மாற்றப்படும் என்றார்.