நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொலை செய்யத் திட்டமிருப்பதாக ஜே.வி.பியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மூலம் வெளிப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான சாட்சியங்களும் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்