Our Feeds


Thursday, February 27, 2025

Sri Lanka

நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் - ஞானசார தேரர்!


சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் வெளியிலிருந்து உணவைப் பெற்றுக் கொள்ள எனக்கு அனுமதியளிக்கவில்லை.

இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? என்னைப் போன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள கைதிகள் பலரும் மனிதாபிமானமற்ற முறையிலேயே நடத்தப்பட்டுகின்றனர்.

இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டன. கைதிகள் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மருத்துவ தேவைகள் காணப்படும் கைதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »