ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற 2025
உலக அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியதாகவும் விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.அத்துடன், ஜனாதிபதியுடனான அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இலங்கைக் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியது.
இவர்கள் இன்று காலை 08.25 மணியளவில் டுபாயில் இருந்து EK-650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதியும் அவரது குழுவினரும் டுபாய் நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.