Our Feeds


Sunday, February 2, 2025

Sri Lanka

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வாகன இறக்குமதிக்கு தயார் - வில்சன் க்வா!

அரசாங்கம் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதால், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மிகவும் பாதுகாப்பான முறையில் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் க்வா தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2018 முதல் உள்நாட்டு சந்தையில் வாகனங்களை இறக்குமதி செய்வதிலும் மறு ஏற்றுமதி செய்வதிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

வாகனங்களை இறக்குமதி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கப்பல் தளம் மற்றும் கப்பல்துறைக்கான அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு வசதிகள் என்பனவும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் சிசிடிவி கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாகவும் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

துறைமுகத்திற்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை அகற்றுவதற்குத் தேவையான சுங்க அனுமதி உட்பட அனைத்து அனுமதி நடவடிக்கைகளுக்கும் விரிவான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »