நாட்டில் சிக்கன் குனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மழையுடன் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே சிக்கன் குனியா நோய் பரவலுக்கு வழிவகுத்ததாகவும் சிறப்பு மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஏடிஸ் எஜிப்டி கொசு இனத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் அதிக காய்ச்சல், மூட்டு வலி, தோல் கருமையாக மாறுதல் என தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், ஓய்வெடுப்பதும், அதிக திரவங்களை குடிப்பதும் மிகவும் முக்கியம் என்றும் நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.