இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு
பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கைதிகளை பார்வையாளர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.