கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின் தடை மற்றும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திடீர் மின் தடையை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை மற்றும் வழிமுறைகள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சில மின் பிறப்பாக்கிகளைக் குறைந்த இயக்க மட்டங்களில் வைத்திருத்தல், சிக்கல்களைத் தவிர்க்கத் தேவைப்படும்போது குறைந்த கேள்வியுள்ள காலங்களில் சூரிய சக்தியைக் குறைத்தல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளில் உள்ளடங்குவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.